வணக்கம் மற்றும் அன்பான வாழ்த்துக்கள்!
பிருந்தாவனத்தில் இந்த கோவில் அமைவதால் இந்த சிலையின் ஜீவன், சாராம்சம் தனது சொந்த இடத்திற்கே பரவுகிறது- வட பாரதத்தின் பிரஜ் பூமி. இங்கே தான் கிருஷ்ணன் பிறந்து தனது குழந்தை பிராயத்தை கழித்தார். கலியூகத்தின் தொடக்கத்தில் துவங்கிய கால சுழற்சியின் முடிவையும் இது வலியுறுத்தும்.
பிருந்தாவனத்தில் மோகன்ஜியின் குறிக்கோள் என்னவென்றால், ஆன்மீக முன்னேற்றத்துடன் கூடிய வாழ்க்கை முறை ஏற்படும் விதமாக கோவில் நகர சுற்றுசூழலை உருவாக்குவதே ஆகும். எனவே ஒருவரின் ஆன்மீக வளர்ச்சி அல்லது பாதை எதுவாக இருப்பினும், பக்தி பாதை (வழிபாடு), ஞான பாதை (அறிவு), கர்ம பாதை (தன்னலமில்லாத சேவை) அல்லது கிரியா பாதை (தியான பயிற்சிகள்) இந்த கோவில், பரம்பொருளை அடைவதற்கான வாய்ப்பு மற்றும் மேடையை வழங்கிவிடும்.
இந்த கோவிலில் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது அன்னதானம், மாடு மற்றும் கன்றுகளுக்கான கோசாலையாக செயல்படும். இரண்டும் கர்ம யோக பாதைக்காக (தன்னலமற்ற சேவை) ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. கோவிலில் ஒரு இல்லம் அல்லது காப்பகம், ஆதரவற்ற பெண்களுக்காக செயல்படும். இந்த பெண்களில் பெரும்பாலானோர் உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், இவர்களில் பலர் பிருந்தாவனத்தின் பகுதியைச் சேர்ந்தவர்கள் . இவர்களுக்கு மருத்துவம் மற்றும் வாழ்வாதாரம் தேவைப்படுகிறது. நமது காப்பகம் இந்த பெண்களை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. அவர்களை மரியாதையோடு அன்பாக அரவணைக்கும்.